100/100 மதிப்பெண் பெற்றவர்கள் : தமிழில் 34 மாணவர்கள் மட்டுமே..!!
May 20, 2026, 10:33 IST1779253410938
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை உள்ளிட்டு மதிப்பெண்கள் அறிந்துகொள்ளலாம்.
இவைமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவியர்கள் 4,35,247 தேர்வெழுதிய நிலையில், 4,19,891 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.47 சதவீதமாகும். அதே போன்று, மாணவர்கள் 4,35,396 தேர்வெழுதிய நிலையில், 4,01,214 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.15 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
அதன்படி, மாணவர்களை விட 4.32 சதவீதம் மாணவியர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11,174 மாணக்கர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
அரசு பள்ளிகள் மாணவர்கள் 91.86 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.34 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளி மாணவர்கள் 94.42 சதவீதமும், பெண்கள் பள்ளி மாணவர்கள் 96.42 சதவீதமும், ஆண்கள் பள்ளி மாணவர்கள் 88.50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 34 மாணக்கர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ் - 34
ஆங்கிலம் - 92
கணிதம் - 3,194
அறிவியல் - 10,476
சமூக அறிவியல் - 3,336

