இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..! விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

 
govt

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவைக் கடன் தொகையை 30.11.2026-க்குள் திருப்பிச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகளின் வசதிக்காக, 28.11.2026 (சனிக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும். எனவே, பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவைக் கடன் தொகையினை செலுத்தி, புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ்அப் உதவி எண் 98840 00845 மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்."

விவசாயிகள் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.