அனைத்து கோயில்களிலும் ஆன்லைன் டிக்கெட்
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட 50க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பக்தர்கள் கோயில்களுக்கு வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். மேலும் பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதையும் தடுக்க முடியும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

