ஆன்லைன் ரம்மி மசோதா- மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் விளக்கம்

 
rn ravi

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். 

Disqualify TN Governor R N Ravi: Petitioner tells Madras High Court |  Deccan Herald

ஆன்லைன் ரம்மியால் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி,  
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும்  சட்டமன்றம் கூடியதை தொடர்ந்து அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்டம் மசோதா அக். 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பப்பட்டது. மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.