சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு- கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி

 
சபரிமலை

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் தேவசம் போர்டு, கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் தேவசம் போர்டு, கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் பக்தர்களுக்கான எண்ணிக்கை 80 ஆயிரத்திலிருந்து 85,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 30 வரை கூடுதலாக 5,000 பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை 56,000 பேர் முன்பதிவு செய்த நிலையில் 48,000 பேர் வருகை முன்பதிவு செய்வோரில் தினமும் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை சபரிமலைக்கு வருவதில்லை தேவசம் போர்டு கூறியுள்ளது.