ரேஷன் கடைகளில் வெங்காயம்
Oct 11, 2026, 12:01 IST1791700262535
ரேஷன் கடைகளில் மூன்றாம் கட்டமாக வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் விற்பனை நியாயவிலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படும். புகார் தெரிவிக்க 96005 61969 வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

