வெங்காயம் விலை மீண்டும் உயர்வு!

 
‘2,000 கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம்’ – இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் ரக நாசிக் வெங்காயம் கிலோ ₹60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் விலை ₹60 முதல் ₹80 வரை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் ரக நாசிக் வெங்காயம் கிலோ ₹60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் விலை ₹60 முதல் ₹80 வரை உயர்ந்துள்ளது. நவராத்திரி காலத்தில் வடமாநில விவசாயிகள் போதிய அளவு வெங்காயத்தைக் கொண்டுவராததால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் பண்டிகைத் தேவையால் விலை மீண்டும் உயரக்கூடும். தீபாவளிக்குப் பிறகு புதிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வரத்து அதிகரித்தால் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.