கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் சிக்கிய நா.த.க. முன்னாள் நிர்வாகி மீது மேலும் ஒரு புகார்

 
சிவராமன்

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் சிக்கிய நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : போலி முகாம்.. போலி மாஸ்டர்..  என்.சி.சி-க்கு  எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரத்தில், போலி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நாம்தமிழர் கட்சியைச் சார்ந்த சிவா என்கிற சிவராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : போலி முகாம்.. போலி மாஸ்டர்..  என்.சி.சி-க்கு  எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை

இந்நிலையில்  கிருஷ்ணகிரி வழக்கில் சிக்கிய நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் போல் நடித்து ரூ.36 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பரம்பரை சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, போலியான நீதிமன்ற ஆணையை காண்பித்து பணம் மோசடி செய்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.