புதுச்சேரியில் மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

 
Death

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் காலி மனையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சிவக்குமார் என்பவர் உயிரிழந்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கன மழை - இயல்பு வாழ்க்கை  பாதிப்பு | Heavy rains in Tamil Nadu and Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை அடை மழை பெய்து வருகிறது. இந்த அடைமழை மழையால் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விளைநிலங்களிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
குறிப்பாக ரெயின்போ நகர், செல்லான் நகர், பாவாணர் நகர், சாமிபிள்ளைத் தோட்டம், வெங்கட்டா நகர் போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதேபோல் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அரியூர் பேருந்து நிலையத்தில் பகுதியில் மழைநீர்  குளம் போல் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் மேம்பாலம் பணி நடைபெறுவதனால் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மழை நீரில் கடந்துதான் வாகனங்களை ஒட்டி செல்ல வேண்டி உள்ளது.


புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் காலி மனையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சிவக்குமார் என்பவர் உயிரிழந்தார். மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என சம்பவ இடத்தில் புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.