உதகை அருகே மலை ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

 
train

மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிபட்டு இறந்தவரின் உடல் மீட்டு அவர் யார்? எதற்காக ரயில் முன் பாய்ந்தார் என ரயில்வே போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

train

தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் பயணித்து வரும் நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வந்த அந்த மலை ரயில் மநியம் மீண்டும் உதகையிலிருந்து குன்னுரை நோக்கி புறப்பட்டு சென்றது. உதகை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சென்ற போது தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ரயில் முன் பாய முயன்றதாக கூறபடுகிறது. ஆனால் அவர் ரயில் பெட்டியில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார். அப்போது சக்கரத்தில் சிக்கி அந்த நபர் சிறிது தூரம் இழுத்து செல்லபட்டார். பின்னர் தூக்கி விசபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அதனை மலை ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரயில்வே ஊழியர் பார்த்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ரயில்வே போலீசார் மலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் யார்? எதற்காக ரயில் பாதையில் வந்தார்? ரயில் மோதி இறந்தாரா?  அவர் உள்ளூரா அல்லது வெளியூரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.