மின்சாரம் பாய்ந்து டிஜே கலைஞர் உயிரிழப்பு

 
death

திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி  அமைக்க முயன்றபோது  மின்சாரம் பாய்ந்து டி.ஜே கலைஞர்   உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த ராமதண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்
சரோஜம்மாள் (70) இவர் வயது மூப்பின்
காரணமாக உயிரிழந்தார் அவருது 16 ஆம் 
நாள் படத்திறப்பு விழா இன்று நடைபெற
உள்ளதையொட்டி அதே பகுதியை சேர்ந்த டி.ஜே கலைஞர் சின்னு (என்கிற) நந்தகுமார்.(வ/21) என்பவர் அப்பகுதியில் ஒலிபெருக்கி அமைக்க
முயன்றுள்ளர், அப்போது  எதிர்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில்  சின்னு என்கிற நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு மைக் செட் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.