ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்!

 
lokh sabha lokh sabha

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார் 

’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும்‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கினர். 

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.