ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேலும் ஒரு மனு

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு இரண்டாவதாக ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். தேர்வு குழு தொடங்கி நியமனம் வரை தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார். ஆகவே அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.