’துரோகி ஆவதைவிட எதிரியாவதே மேல்’- நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

 
சீமான்

நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம். கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல்! இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.