விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து வழக்கில் மேலும் ஒருவர் கைது

 
tn

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதி ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடிபொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

Fire

வெடிவிபத்து நிகழ்ந்த கல்குவாரி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்குவாரியை மூட வலியுறுத்தி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

tn

இந்நிலையில் விருதுநகர் அருகே காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக, சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமாரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். குவாரி உரிமையாளர் சேதுராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.