தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!
கோவை மாவட்டம், சூலூர் அருகே வசித்த தம்பதிக்கு, 10 வயதில் மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்தனர். ஒரு வாலிபர், சிறுமியை பைக்கில் ஏற்றி சென்றதாக, கடைக்காரர் கூறினார்.
எங்கே தேடியும் கிடைக்காததால், பெற்றோர் சூலுார் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில்,ஏற்கனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் மோகன் ராஜூம் கைது செய்யப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளின் படி, அதே பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
கைதான கார்த்திக், போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜை வரும் மே 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

