சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது! வச்சு செய்யும் போலீசார்
![சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/fb64878888e51e0e46d108ce42821bfb.webp)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.