மதுரைக்கு ஒரு அமைச்சர் சென்னைக்கு 4 அமைச்சர்- விஜய்யின் பாரபட்சம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி எப்போதுமே வரலாற்று சிறப்பு மிக்க பார்வர்டு பிளாக் கட்சியின் கோட்டை ஆகும். இந்த தொகுதியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு அடுத்தபடியாக அதிகமாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸுக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சியின் கோட்டை என அறியப்பட்ட உசிலம்பட்டி தொகுதியில் சிங்கம் சின்னத்தை தவிர இரட்டை இலை, உதயசூரியன் மட்டுமே மக்களுக்கு தெரியும். ஆனால் அந்த மக்களுக்கு பரிட்சையம் இல்லாத காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை போட்டியிட வைத்தது திமுக. ஏற்கனவே தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி எழுந்த நிலையில் மக்கள் வேறு வழியின்றி தமிழக வெற்றி கழகத்தை இந்த தொகுதியில் வெற்றி பெறச் செய்தனர். பாரம்பரிய மிக்க மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய மைல்களாக பார்க்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க உசிலம்பட்டி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. அவ்வளவு சிறப்பு மிக்க இந்த தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற விஜய மகாலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
சீர்மரபினர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அப்படி இருக்கையில் தென் தமிழகத்தில் பெருங்காநல்லூர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்த தொகுதி எம்எல்ஏவுக்கு சீர் மரபினர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் விஜய் அவ்வாறு செய்யாமல் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க சமூகத்தை புறக்கணித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் மட்டும் பத்து தொகுதியில் எட்டு தொகுதி தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒரு அமைச்சர் மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் 4 அமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்வர் விஜய்யின் பாரபட்சமான நடவடிக்கை என்று தமிழக வெற்றி கழகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

