திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

 
tn

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு  ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

dmk

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி,  காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது இருக்கிறது.   அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது.  இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக, விசிக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியானது. மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கவும், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது.



vaiko ttn

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.