நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி

 
ச்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் உடலை உறவினர்களுக்கு காட்டாமல் கூராய்வுக்கு வனத்துறை அனுப்பி வைத்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றன. மனித - வன விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாலகிருஷ்ணன் உடலை தங்களிடம் காட்டாமல் அவசரமாக அனுப்பி வைத்தது ஏன்? என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயிரிழந்து கிடந்த நிலையில் வனத்துறை விசாரணை நடத்திவருகிறது.