கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

 
ச் ச்

நாகர்கோவில் அருகே கார்  கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் காரை ஓட்டிய கிறிஸ்டோபர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (48). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று காலையில் பூதப்பாண்டி அருகேயுள்ள அம்பட்டையான் கோணம் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து  தனது வீட்டிற்கு அவரது சொகுசு காரை ஓட்டி கொண்டு சென்றுள்ளார். அப்போது பூதப்பாண்டியை அடுத்துள்ள நாவல்காடு அருகே வரும் போது அவரது கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள அரசியல் கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தை கண்ட அப்பகுதி  பொதுமக்கள் கால்வாய்க்குள் இறங்கி  தலை கீழாக கவிழ்ந்து கிடந்த  காரின் கதவை உடைத்து கிறிஸ்டோபரை வெளியே எடுத்து 108 ஆம்புலன்சிற்க்கு தகவல் தெரிவித்தனர்கள். அவர்கள் சம்பவ இடம் வந்து அவரை பரிசோதித்து பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.