அதிர்ச்சி சம்பவம்! வெயிலின் தாக்கத்தால் வேலூரில் ஒருவர் பலி

 
dead body

வேலூரில் வெயிலின் தாக்கத்தால் 48 வயது நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் மதிய வேலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிற்குமாறு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  
இந்நிலையில், வேலூரில் வெயிலின் தாக்கத்தால் 48 வயது நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே  பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன்(48) என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். திடீரென வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கிய போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  இவர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெயிலால் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.