புதிய போக்குவரத்து விதிமுறை- 10 நாட்களில் ரூ.1.41 கோடி அபராதம் வசூல்

 
புதிய போக்குவரத்து அபராதம்

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி இதுவரை 17453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி ஒரு கோடியே 41 லட்சத்து 48 ஆயிரத்து 555 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் 50 லட்சத்து 5 ஆயிரத்து 256 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

New Motor Vehicle Act came into effect in Chennai | சென்னையில் புதிய  மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது

குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி 5096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 லட்சத்து 42 ஆயிரத்து 208 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி 2284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 லட்சத்து 39 ஆயிரத்து 518 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் ஐந்து லட்சத்து 85 ஆயிரத்து 800 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவறான திசையில் வாகனத்தை சென்றதாக கூறி கடந்த 10 நாட்களில் 878 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 லட்சத்தி 53 ஆயிரத்து 201 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.  தெளிவாக இல்லாத பதிவன் தொடர்பாக 590 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 591 வழக்குகள் கடந்த 10 நாட்களில் பதிவு செய்யப்பட்டு 37 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு 10 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்திய தொடர்பாக 716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கடந்த 10 நாட்களில் மட்டும். போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் சென்றதாக கூறி கடந்த பத்து நாட்களில் 629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வாகன திருத்த சட்டம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் அதிக அபராதம் வசூலிக்க வேண்டும் என்கின்ற நோக்கம் இல்லை. மாறாக இதன் மூலம் பொதுமக்கள் சட்ட ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே காவல்துறை நடந்து கொள்கிறது. அதேபோல் இந்த முறை 38 சதவீதம் வரை போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 சதவீதம் சென்னையில் சாலை விபத்துகளும் குறைந்துள்ளது.