அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் - தினகரன் காட்டம்

மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி பேசியது தவறு என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழை வைத்து அரசியல் செய்தது போல் இப்பொழுது மதத்தை வைத்து அரசியல் செய்கிறது திமுக . மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி பேசியது தவறு ; சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டாக பேசி உள்ளார்,இருப்பினும் அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம். ஒரு நாடு ஒரு தேர்தல் சாத்தியமாகாது;
எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி மாதிரி அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒரு நாடு ஒரு தேர்தல் வேண்டாம் என்பார் இப்போது வேண்டும் என்பார். தீய சக்தியும் ஜெயிக்க கூடாது; துரோக சக்தியும் ஜெயிக்க கூடாது என்பது எங்களின் நோக்கம். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கவும் தயார் என தெரிவித்தேன் என்றார்.