திருப்பதி சென்ற பெண்களிடம் மாங்கல்ய பூஜை என்ற பெயரில் மோசடி- ஒருவர் கைது

 
ச் ச்

திருமலையில் மாங்கல்ய பூஜை என்ற பெயரில் மோசடி செய்து பக்தர்களை ஏமாற்றிய மதுரையை சேர்ந்த முருகன் நாகராஜுவை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த  தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று அப்பாவி பெண் பக்தர்கள் ஏமாற்றப்பட்டு, சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த  சம்பவம் தொடர்பாக திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் மார்ச் 14ம் தேதி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண் பக்தரிடம் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், மாங்கல்ய பூஜை செய்தால் தேவஸ்தானத்தில் வேலை கிடைக்கும் என்று நம்ப வைத்து அவளிடமிருந்து 80கிராம் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு, தெப்பகுளத்தில்  குளிக்கச் அனுப்பி வைத்து தப்பிச் சென்றான்.

இதேபோல் கடந்த மார்ச் 18-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் இதேபோன்று ஏமாற்றி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பெற்று  தெப்பகுளத்தில்ப்  குளிக்கச் அனுப்பி வைத்து தலைமறைவானார்.கடந்த மார்ச் மாதம் 29 ம் தேதி  திருவண்ணாமலையை   சேர்ந்த உச்சிமஹாலி என்ற பெண் ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள தேங்காய் உடைத்து வழிப்படும் அகிலாண்டத்திற்கு வந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒரு நபர் தன்னை தேவஸ்தான ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, மாங்கல்ய பூஜை செய்வதால் அவரது கணவருக்கு ஆயில் அதிகமாவதோடு  குடும்பத்தினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறினார். பின்னர் அந்த பெண்னை அங்குள்ள பேடி  ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மினி ஷாப்பிங் வளாகத்திற்கு அழைத்துச் சென்று,  இரண்டு டஜன்  வளையல்களைக் கொடுத்து, அவர்களிடமிருந்து 40 கிராம் தங்க தாலி செயின் , ஒரு லட்சுமி டாலர் செயின் மற்றும் இரண்டு செல்போன்களை பெற்று கொண்டார். பின்னர்  அவர்களை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்திற்கு சென்று, குளித்துவிட்டு, கோயிலுக்கு முன்னால் வந்தால்  மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி அனுப்பி வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாக திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  

இதுகுறித்து டி.எஸ்.பி. விஜயசேகர் எஸ்.ஐ.க்கள் டி.ரமேஷ் பாபு மற்றும் சி.சலபதி தலைமையில் ஒரு சிறப்பு குழு நியமித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் சந்தேக நபர்களைத் தேடுவதற்காக சென்னை, மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள குற்றப் பிரிவு காவல் நிலையங்களுக்குச் சென்று, பழைய வழக்குப் பதிவுகளை ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களைப் பெற்று விசாரணைகளை நடத்தினார். விசாரணையின் ஒரு பகுதியாக, மதுரையை சேர்ந்த முருகன் நாகராஜு பற்றிய விவரங்கள் தெரிய வந்தது. மேலும் அவரது  குற்றவியல் வரலாறு வைத்து  போலீசார்    தொழில்நுட்பத்தின் மூலம் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். இதில் திருமலையில் பெண்களிடம் மோசடியில் ஈடுப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முருகன் நாகராஜு கைது செய்து  அவரிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 132 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய  விசாரணையில்,  முருகன் நாகராஜு கடந்த 35 ஆண்டுகளாக இதே போன்ற குற்றங்களைச் செய்து சிறைக்கு சென்று வந்துள்ளது தெரிய வந்தது. அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகி, மோசடி/திருட்டு மூலம் சம்பாதித்த பணத்தைப் வைத்து ஆடம்பரமான லாட்ஜ்களில் வசித்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். விசாரணையில், அவர் மீது ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக பில் செய்யப்படாத வாரண்டுகளும் நிலுவையில் உள்ளன. 

கைது செய்யப்பட்ட முருகன் நாகராஜை திருமலையில் கைது செய்யப்பட்டு திருப்பதி 2வது கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகளைத் தீர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட  திருமலை காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. வி. ஹர்ஷவர்தன் ராஜு  பாராட்டினார். இதுகுறித்து  மாவட்ட எஸ்பி  ஹர்ஷவர்தன் ராஜு கூறுகையில்  ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தர்கள் புதிதாக  யாரையும் நம்பக்கூடாது என்றும், தனியார் நபர்கள் திருமலையில் எந்த பூஜைகளையும் செய்யக்கூடாது  இதுபோன்ற மோசடி செய்பவர்களையோ அல்லது திருடர்களையோ நீங்கள் கண்டால், உடனடியாக உங்களைச் சுற்றியுள்ள போலீசாரை  அல்லது விஜிலென்ஸ் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது 112 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.