குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கார்க்கமங்லத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டருகே உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமேல்குடி தாலுகா கார்க்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் சார்லஸ், இவரது பெண் குழந்தை பெர்னிசி (ஒன்றரை வயது),குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளதுஅப்போது எதிர்பாராத விதமாக வீட்டருகே உள்ள குளத்தில் குழந்தை தவறி விழுந்து இறந்துள்ளது. நீண்ட நேரமாக குழந்தை காணாமல் போனதையடுத்து உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது குழந்தை தண்ணீருக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கோட்டைப்பட்டிணம் காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


