நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா..!

 
1 1

மதுரை விரகனூர் மதகணையில் இரும்பு கதவுகள் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் வரும் 12 ஆம் தேதி முதல் மதகனை பாலம் அடைக்கப்பட உள்ளது.

ஆனால் மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதகணையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் என உறுதி தெரிவித்தார்.