மீண்டும்...மீண்டுமா..?? இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!!
Nov 19, 2025, 17:49 IST1763554769036
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் ரூ. 800 உயர்ந்த நிலையில், மாலையிலும் மீண்டும் ரூ.800 ரூபாய் அதிகரித்தது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 92,800-ஐ எட்டியுள்ளது.
ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.176-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


