ஓணம் பண்டிகை - அண்ணாமலை வாழ்த்து

 
Annamalai

ஓணம் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்குமான நல்லாட்சி புரிந்த மகாபலி மன்னரும், அவரை வருடம் ஒரு முறை தன் மக்களைக் காண அருளிய வாமனக் கடவுளும், அனைத்து மக்களுக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்களும், நலன்களும் வழங்க மனமார வேண்டிக் கொள்கிறேன்.


இந்தத் திருவோண தினம், ஜாதி, மொழி, இன பேதமற்ற சமூகம் உருவாகவும், தான், தன் குடும்பம் என்ற சுயநலனுக்காக, ஜாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களைப் பிரித்து, அவர்கள் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையட்டும். மக்கள் வாழ்வு சிறக்கட்டும். என்று பதிவிட்டுள்ளார்.