#Breaking மார்ச் 26-ல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்

மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதன்படி, வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகும் நாள்- 18.03.2023 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை , வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்- 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை , வேட்புமனு பரிசீலனை- 20-03-2023 திங்கட்கிழமை காலை 11 மணி, வேட்புமனு திரும்பப் பெறுதல்- 21-03-2021 செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை, வாக்குப்பதிவு நாள்- 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 27-03-2023 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு! 🌱✌🏻#அதிமுக #AIADMK pic.twitter.com/sgbQzgExfE
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) March 17, 2023
அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.