சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

 
omr road signal

இன்று காலை (14.1.2022) முதல் சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் சிக்கனலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது,

omr road signal

அதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையாளர் வாகனங்கள் செல்லும் பாதை மற்றும் சிக்னல் குறித்து தகவலுடன் வரை படம் வெளியிட்டுள்ளார், அதன்படி, இன்று காலை முதல் போக்குவரத்து காவல் துறையினர் புதிய மாற்றத்தை அமுல்படுத்தவுள்ளனர்,

ஏற்கனவே பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர் சாலையில் ஒரு சுங்கசாவடியும், சோழிங்க நல்லூர் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையில் ஒரு சுங்கச்சாவடியும் இருந்த நிலையில் அந்த சுங்க சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை சில மாதம் முன்பு நிறுத்தப்பட்டது அதனால் வாகனங்கள் சுற்றுபாதையில் நேரம் செலவிடுவதை தவிர்க்கவும், விரும்பிய பகுதிக்கு எளிதில் செல்லவும், சிக்னல் நேரத்தில் அதிக அளவு பாதசாரிகள் கடப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.