“நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்”

 
பேருந்து நிலையம்

நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாக அலுவலர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை குறைத்த ஆம்னி பேருந்துகள்; விவரங்கள் வெளியீடு | nakkheeran

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்த நிலையில், ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதியை இட வசதி இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய நிர்வாக அலுவலர் பார்த்திபன், “ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இங்கு 250 ஆம்னி பேருந்துகள் வரை நிறுத்துவதற்கான இடவசதிகள் உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கென ஐந்து நடை மேடைகளும், ஒரே நேரத்தில் 77 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், 1330 பணியில்லா பேருந்துகள் நிறுத்தம் வகையிலும் இட வசதி உள்ளது. புதியதாக வரும் பயணிகளுக்காக மக்கள் உதவி மையம் அமைக்கப்பட்டு தனியார் பேருந்துகளின் பெயர்கள் வரைமுறைப்படுத்தப்பட்டு எந்த பகுதியில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுவருகிறது. 

தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வந்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் செயல்பட துவங்கி உள்ளது. தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5.000 பயணிகளை கையாண்டு வருகிறோம். ஆம்னி பேருந்து பயணிகளை கையாளுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்தார்.