#BREAKING ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை

 
விதிமீறலில் ஈடுபட்ட 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: ரூ.18.76 லட்சம் அபராதம்

சட்டமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 3500 ரூபாய் முதல் 4000 வரை கட்டண வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலிக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 3,600 வரை வசூல் செய்யப்படுகிறது. கோயம்புத்தூருக்கு 3200 ரூபாய் அதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.  போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்வதற்கான தொடர்பு எண்ணை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிவித்துள்ளது. 1800 425 6151 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.