அவகாசம் கேட்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் - காரணம் இதுதான்!!

 
omni bus

கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

tn

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கிருந்து ஊருக்கு செல்கின்றனர்.

bus

இந்த சூழலில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.   கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துநிலையம் கட்டி முடிக்கும் வரை  கோயம்பேட்டில் இருந்தே இயக்க அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 24க்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முடிச்சூரை தாண்டக் கூடாது என போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.