பற்றி எரிந்த பேருந்து- கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்! சேலத்தில் பரபரப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தின் காரணமாக முன்னாள் சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீ விபத்து பஸ் எரிந்து முழுவதும் சேதமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பேருந்து நேற்று இரவு சுமார் 10.20க்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 பயணிகளுடன் புறப்பட்டு இன்று காலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர். உடனே பயணிகள் பேருந்தில் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். அப்போது சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக பேருந்து தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சங்ககிரி தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து, தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்து தடுத்து நிறுத்தி பாதுகாப்புகள் ஏற்படுத்தினர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சின்னாக்கவுண்ட னூர் பகுதியைச்சேர்ந்த பெரியசாமி என்று கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது சடலத்தை கைப்பற்றி சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து கவிழ்ந்ததும் லேசான காயம் அடைந்த பயணிகள் கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர். இந்த விபத்தின் காரணமாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. பேருந்து விபத்துக்கு காரணம் பேருந்தின் ஓட்டுனர் அதிவேகமாகவும் கவனக்குறைவாகும் ஓட்டியது என போலீசார் தெரிவித்தனர்.


