பெரும் அதிர்ச்சி! காலையிலேயே கோர விபத்து! ஆம்னி பேருந்து கவிழ்ந்தது

 
பெரும் அதிர்ச்சி! காலையிலேயே கோர விபத்து! ஆம்னி பேருந்து கவிழ்ந்தது

ராமநத்தம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 30 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து  ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று இரவு 57 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது ராமநத்தம் அருகே லக்கூர் கைகாட்டி வந்து கொண்டிருக்கும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியாவில் மோதி அருகில் இருந்த பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது. பின்னால் வந்த லாரி பேருந்து பின்னால் குத்தி நின்றது. ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் இறந்தார்.

இதனை அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களை மீட்டு பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.