பா.ம.க. அலுவலகம், ராமதாஸ், அன்புமணி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள அவரது வாடகை வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள பாமக தலைமை அலுவலகம், தைலாபுரம் ராமதாஸ் இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மவுண்ட் ரோடு தர்கா அமெரிக்க துணை தூதரங்களுக்கும் விஷமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய விஷமிகளை போலீசார் தேடி வருகின்றன.
மோப்பநாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதேபோல் சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


