"கறைபடாத தலைவராக விளங்கிய ஐயா ஓமந்தூர் ராமசாமி" - அண்ணாமலை புகழாரம்

 
Annamalai

ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவில், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான, ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களது பிறந்த தினம் இன்று.

tn

தனது ஆட்சிக் காலத்தில், ஆலய நுழைவுச் சட்டம், ஜமீன் ஒழிப்புச் சட்டம் என பல்வேறு சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர். ஊழலுக்கு எதிரானவர். விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தவர். 


நேர்மையும் துணிச்சலும் மிக்க, கறைபடாத தலைவராக விளங்கிய ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.