#BREAKING இந்திய முட்டைக்கு தடை விதித்த ஓமன்

 
egg

கடலூரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தியா முட்டை இறக்குமதிக்கு ஓமன் அரசு தடை விதித்துள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் தினசரி சுமார் 40 சதவீதம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. சுமார் 20 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது.

இந்நிலையில் கடலூரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தியா முட்டை இறக்குமதிக்கு ஓமன் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை காரணமாக மாதந்தோறும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஓமனுக்கு அனுப்பப்படும் 6 கோடி முட்டை ஏற்றுமதி பாதிப்பு அடைந்துள்ளது