ஓல்டு மாங்க் ரம்மே இல்லையாம்: ஐகோர்ட்டில் போட்டு உடைத்த FSSAI..!
மது பிரியர்களின் விருப்பமான பிராண்டுகளில் ஒன்றாக ஓல்டு மங்க் ரம் இருந்து வருகிறது. Old Monk என்ற பெயரை நேரடியாக மொழிமாற்றம் செய்தால், பழைய துறவி, அல்லது முதிர்ந்த துறவி என்று கூறலாம். ரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை மர பீப்பாய்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த பீப்பாய்கள் மடங்களில் காணப்படும் என்பதால் அதை மையப்படுத்தி இந்த ரம்முக்கு ஓல்டு மங்க் என்று பெயர் வைக்கப்பட்டதாக சொல்வார்கள்.
ஓல்டு மங்க் என்ற பிராண்ட் மது பிரியர்கள் மத்தியில் அதிகம் ரீச்சானதால் அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஒரு பைசா கூட செலவிட்டது இல்லை என்று அதன் தயாரிப்பு நிறுவனமான மோகன் மோகன் மீக்கின் தெரிவித்துள்ளது.1954 ஆம் ஆண்டு மோகன் மீக்கின் நிறுவனம் ஓல்டு மங்க் ரம்மை அறிமுகம் செய்கிறது. அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதன் தரமும் சுவையும் மாறவில்லை என்று மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஓல்டு மங்க்கில் XXX வகை ரம் பாட்டில்கள் அதிகம் விற்பனையாகிறது.
ல்டு மங்க் ரம்மில் ஆல்கஹால் 42.8 சதவீதம் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 80 லட்சத்திற்கும் அதிகமான பாட்டில்கள் விற்பனையாகின்றன. இந்தியாவை தவிர்த்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, கடனா, கென்யா உள்ளிட்ட 50 நாடுகளில் ஓல்டு மங்க் ரம்மிற்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஓல்டு மங்க் ரம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மது பிரியர்களிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது ரம் பிரியர்கள் கொண்டாடிய இந்த பிராண்டு தான் இது ரம்மே அல்ல என்ற அதிர்ச்சியை தந்திருக்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI). இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆய்வகத்தில் சோதனை செய்தது. இதில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தயாரித்த மெக்டொவல்ஸ் நம்பர் 1 ரம், ஆன்டிகுவிட்டி ப்ளூ விஸ்கி மற்றும் ராயல் சேலஞ்ச் விஸ்கி ஆகியவற்றின் குறிப்பிட்ட வகைகளின் விற்பனைக்கும், மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் தயாரித்த ஓல்ட் மங்க் ரம் வகைகளின் விற்பனைக்கும் தடை விதித்தது.
இதுதொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தரப்பு வாதங்களை முன்வைத்த எப்எஸ்எஸ்ஏஐ, ஓல்ட் மாங்க் ரம்மை ரம் என்ற பெயரில் விற்க செய்ய முடியாது என்றும், ரம் சுவை கொண்ட ஸ்பிரிட் என்று வேண்டுமானால் லேபிளில் குறிப்பிட்டு விற்கலாம். ஏனெனில் இது ரம் அல்ல.

