பைக்கில் இருந்து மயங்கி விழுந்து முதியவர் பலி

 
Death Death

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த முதியவர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் முதியவரான இவr, நேற்று தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை பள்ளிபாளையத்திலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பெட்ரோல் பங்க் சாலை அருகே சென்று கொண்டிருந்த பொழுது  எதிர்பாராதவிதமாக மயங்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து அப்படியே சாலையில் விழுந்து சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, சாலையோர சாக்கடை கால்வாய் தடுப்பு சுவர் மேலே தலை  உரசியபடியே கீழே விழுந்தார் .

இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிபாளையம் போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர்  மாரடைப்பால் உயிர் இழந்தாரா!? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என விசாரித்து வரும் நிலையில், இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...