அண்ணாமலைக்கு முருங்கைக்காய் வழங்கிய மூதாட்டி

 
Annamalai

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை, தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த ஒரு மாத காலமாக தென் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். 

Image

அந்த வகையில் தேனி மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலையை மூதாட்டி ஒருவர் இன்முகத்துடன் வரவேற்றார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, “இன்றைய தினம், தேனி மாவட்டத்தில் பொதுமக்களோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்கையில், தேனி ஒன்றியம் ஜங்கால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 90 வயதான சின்னத்தாய் அம்மாள் பாட்டி அவர்கள், வழியில் காத்திருந்து, தம் தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களையும், முருங்கைக் கீரையையும் வழங்கி, வீட்டுக்குக் கொண்டு செல்லுமாறு பணித்தது என்னை நெகிழச் செய்தது. 

Image

பெறுவதற்கரிய வாழ்த்துக்களாகவே சின்னத்தாய் அம்மாள் பாட்டி அவர்களின் பேரன்பைக் காண்கிறேன். அவர்களுக்கு எப்போதும் எனது அன்பும் மரியாதையும் உரித்தாயிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.