'யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்' - போஸ் வெங்கட் கருத்தால் கொதிப்பில் விஜய் ரசிகர்கள்..!!

 
 'யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்' - போஸ் வெங்கட் கருத்தால் கொதிப்பில் விஜய் ரசிகர்கள்..!!


தவெக தலைவர் விஜய் குறித்து நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார்.  இதனைத்தொடர்து தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாணி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் தன் கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல்திட்டம், கொள்கைத்தலைவர்கள் யார், அரசியல் எதிரிகள் யார் யார் என்பதையெல்லாம் விஜய் தெரிவித்திருந்தார். 

Vijay

மதச்சார்பற்ற சமூக திதி என்பது தான் தனது கொள்கை என அறிவித்த விஜய், அண்மைக்காலமாக அரசியல் களத்தில் அதிகம் பேசப்படும் பிளவுவாத அரசியல், நீட் எதிர்ப்பு, திராவிட மாடல், காவி சாயம் பூசுவது, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும்  பேசிருந்தார்.  திமுக - பாஜக என இரண்டு கட்சிகளையும் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சுமார் 48 நிமிடங்கள் நீடித்த விஜய்இன் உரை, அவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு விருந்தாகவே அமைந்துவிட்டது. விஜயின் மாநாடு மற்றும் கொள்கைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

அதேநேரம் மாற்றுக் கட்சியினர் விஜய் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.  அந்தவகையில் நடிகரும் , கன்னிமாடம், சார் உள்ளிட்ட படங்களை இயக்கிய  இயக்குநருமான போஸ் வெங்கட், விஜய்க்கு எதிராக கூறியிருக்கும் கருத்து விஜய் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. 

vijay

 திமுகவைச் சேர்ந்த போஸ் வெங்கட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..  "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்” என்று சிரிப்பது போன்ற எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் இயக்குநர் போஸ் வெங்கட்டை வறுத்தெடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் வசைபாடி வருகின்றனர்.