அடேங்கப்பா..! 4 நாட்களில் 500 கோடி வசூலித்த கல்கி திரைப்படம்..!

 
1

பாகுபலி படத்திற்கு பின்னர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் கல்கி 2898 AD.ஷூட்டிங் தொடங்கி ரிலீஸ் வரை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படம் மூன்று நாட்களில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு, இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திரப் பின்னணி, சுப்ரீம் யாஸ்கினின் அடுத்தகட்ட நடவடிக்கை, சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி, புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணிப் பிரபலங்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானோர் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வசூல் சாதனையை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.