அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு குறைஞ்சதா? தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்!

 
Gold

தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த நாளே நகைப்பிரியர்களை அதிர்ச்சியில ஆழ்த்தி இருக்கிறது தங்கம் விலை. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்ததை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று அதிகரித்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சரிந்தது. இதனால் நகை வாங்க நினைப்போரும், சிறிய அளவில் முதலீடு செய்ய நினைப்போரும் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டினர். ஆனால் அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் வங்கி ஆலோசனை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை.

இதனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை சற்று உயரத் தொடங்கியது. இந்நிலையில் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக தங்கம் விலையானது விறுவிறுவென அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. எனினும், தங்கம் மற்றும் வெள்ளி விலையை கணிக்க முடியாத நிலை தொடர்வதால், அடுத்த 6 மாதங்களுக்குள் திருமணம் செய்ய திட்டமிடுவோர் நகைகளை முன்கூட்டியே வாங்குவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.13,210-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,05,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரமாகவும் தொடர்கிறது