5 தலைமுறை மக்களை வெறியேற்றிய அதிகாரிகள் - வனத்துறை அளித்த பரபரப்பு விளக்கம்

 
வனத்துறை

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியான ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக குடியிருக்கும் பூர்வீக குடிமக்களை ஆக்கிரமிப்பு என கூறி ஆண் பெண் பாராமல் வனத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர். வீட்டை உடைத்து பெண்கள், குழந்தைகளை வனத்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியானதால், பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் 5 தலைமுறை மக்களை வெறியேற்றியது ஏன்? என வனத்துறை அளித்த பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது. யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக வனத்துறை கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவு படியே பூர்வக்குடி மக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்குட்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.