அமைச்சருக்காக 2 மணி நேரமாக கையில் பூங்கொத்துடன் காத்திருந்த அதிகாரிகள்!
திருப்போரூர் அருகே நெம்மேலி பகுதியில் அமைச்சர் ஆனந்த்க்காக அதிகாரிகள் 2 மணி நேரமாக கையில் பூங்கொத்துடன் காத்திருந்தனர்.

திருப்போரூர் அருகே நெம்மேலி பகுதியில் நடைபெற்று வரும் மாமல்லன் நீர்த்தேக்க பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் வீரப்பன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக அமைச்சரை வரவேற்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக வண்ணமயமான பூங்கொத்துகள், பொன்னாடைகள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் திட்டமிடப்பட்ட நேரத்தைக் கடந்து 2 மணி நேரமாகியும் அமைச்சர் வராததால் நேரம் செல்லச் செல்ல வரவேற்க நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைகளில் பூங்கொத்துகளுடன் கால் கடுக்க தவிப்புடன் காத்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.

