கட்சி கம்பத்திற்கு பதிலாக தேசியக் கொடி கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்

 
ச் ச்

தேனியில் கட்சி கொடி கம்பத்தை அகற்றுவதற்கு பதிலாக தேசியக்கொடி கம்பத்தை நகராட்சி நிர்வாகம் அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


       
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசியல் கட்சி, மற்றும் கொடி சமுதாய கொடி கம்பங்கள் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் கடந்த நான்கு மாதங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றம் உத்தரவு காரணமாக பெரியகுளம் நகராட்சி சார்பாக வடகரை பகுதியில் பொது இடங்களில் வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் சமுதாயக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

இதில் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே சரஸ்வதி நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் நகராட்சி நூலகம் அருகில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தினை அகற்றியுள்ளனர். நகராட்சியினர் தேசிய கொடி கம்பத்தை அகற்றும் வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. தேசிய கொடிகம்பத்தை அகற்றும் போது அங்கிருந்த பள்ளி சார்பாக இது தேசிய கொடி ஏற்றும் கம்பம் என தெரிவித்தும் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் எனக் கூறி அவற்றை அறுத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.