மேலிட உத்தரவு: திருநெல்வேலி மண்டலத்தில் பேருந்து சேவையை குறைத்த அதிகாரிகள்
திருநெல்வேலி மண்டலத்தில் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்தக் கோட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட மாநகர, நகர மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் மகளிர் இலவச பேருந்து சேவை தற்போது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு 10 மணிக்கு மேல் மகளிர் பேருந்து பஸ்களை நிறுத்தவும் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி வரை நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. அதேபோன்று வருவாயை காரணம் காட்டி மற்ற பேருந்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் 20 முதல் 30 நிமிடங்களில் இருந்த பேருந்து சேவை தற்போது 45 முதல் ஒரு மணி நேரம் ஒரு முறை பேருந்துகள் இயக்கப்படுகிறது. 40 முதல் 50 பேருக்கு மேல் இருந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மேலிடம் போக்குவரத்து பணிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நாள் பேருந்து சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு பேருந்துகளை நம்பி பயணம் செய்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றம் வரும் என்று எண்ணிய மக்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

