முதலமைச்சர் விஜயின் இனிசியலில் பிழை... பேசுப்பொருளான கடிதம்
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சரின் இனிசியலை C-க்கு பதில் S என மாற்றிப் போட்ட அதிகாரிகளின் செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், அந்த தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) ரத்து செய்துள்ளது. இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் என்.டி.ஏ கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சரின் இனிசியலை C-க்கு பதில் S என மாற்றிப் போட்ட அதிகாரிகளின் செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

